என் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் சீரிய தமிழ்ப் பூ !

திங்கள், 26 ஜூலை, 2021

வேண்டாமே வெள்ளைச் சர்க்கரை !

 

எச்சரிக்கை !!!

 

ஐயா தயவு செய்து இந்த நஞ்சினை (விஷத்தை) நீங்களும் உங்கள் குழந்தைகளும் உண்ணாதீர்கள்;  மன்னிக்கவும் யாரும் உண்ண வேண்டாம்;  நாய்க்குக் கூடக் கொடுக்க வேண்டாம்.

 

ஏனெனில்  வெள்ளைச் சர்க்கரை (SUGAR) என்பது மெல்ல மெல்ல நம்மைக் கொல்லும் ஒரு நச்சுப் பொருள் (Sugar  is a slow poison) .

 

உங்கள் சட்டைக் கழுத்துப் பட்டியில் (காலரில்) உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் வெள்ளைச் சர்க்கரையை (சீனியை)  எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும்.

 

ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த வெள்ளைச் சர்க்கரையை (சீனியை)  சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

 

இனிப்பை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.

 

பதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

 

வெள்ளைச் சர்க்கரையை  (சீனியை)  தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என்று பாப்போம் .

 

(01) கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளீச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை திரவ  பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 

 

(02). பிழிந்த கரும்புச் சாறு 60 டிகிரி சென்டிகிரேட் முதல் 70 டிகிரி சென்டிகிரெட்வரை சூடு படுத்தப்படுகிறது.  அதில்  பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலக்கப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

 

(03). இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவைச்  செலுத்துகிறார்கள்.

 

(04)  கொதிகலனில் உள்ள கரும்புச் சாற்றை 102 டிகிரி சென்டிகிரேட்  வரை சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழக்கச் செய்து ,  சுண்ணாம்பு சத்து மட்டும் அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

 

(05) அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் விட்டு மண், சக்கை போன்ற பொருள்களைப் பிரித்து எடுக்கிறார்கள்; இப்போது  தெளிந்த சாறு கிடைக்கிறது.

 

(06)  தெளிகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா ஆகியவற்றைச் சேர்த்து அடர்த்தி மிகுந்த கருப்பஞ் சாறு தயாரிக்கப்படுகிறது.

 

(07) மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, கருப்பஞ்சாறு  டிக நிலையை அடைந்து  வெள்ளைச் சர்க்கரையாக (சீனியாக) வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

 

(08)  இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

 

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனியைச் சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. இதனால் தான் வெள்ளைச் சர்க்கரையின் நிறம் சற்று மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடுகிறது.

 

குடலில் புண் (அல்சர்) ஏற்படுதல், பல் வலி, பல்சொத்தை,  சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய்,  நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அனைத்துக்கும் வெள்ளைச் சர்க்கரை தான்  முதன்மைக்  காரணியாக அமைகின்றது.

 

ஆலைகளில் தயாராகும் வெள்ளைச் சர்க்கரை  (சீனி) சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

 

டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12 H22 O11. இந்த சர்க்கரையில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரஜன் அணு, 11 ஆக்ஸிஜன் அணுக்கள்  உள்ள. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது.

 

போதையுணர்வு ஊட்டும் கொகைனின் இரசாயன மூலக்கூறு C17 H21 NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சர்க்கரையில் நைட்ரஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.

 

நண்பர்களே வெள்ளைச் சர்க்கரை பற்றிய உண்மை நிலையை  இன்றய ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை;  உண்மை மறைக்கப்படும்  சதி எனவும் கூறலாம். சர்க்கரை ஆலை அதிபர்களால் நம்  மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நம்மை ஆளும் அரசுகள் கண்டு கொள்வதில்லை ! நாமாவது முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்துவோமே !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

த.அழகேசன்,

ஆட்சியர்,

தமிழ்ப் புனல் வலைப்பூ,

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 10]

{26-07-2021}

------------------------------------------------------------------------------------

நம் உடலுக்கு நலம் தரும் தேங்காய் !

 

தேங்காயைத் தின்றால் தேடி வரும் மாரடைப்பு 

என்று 

நிறைய பேர் கைவிட்டனர் !

 

உண்மை இதோ !

 

*பச்சை தேங்காயின் பயன்கள்*

தேங்காயைப் பச்சையாக ஒரு வேளை உணவாக 

எடுப்பதினால் ஏற்படும் நன்மை !

 

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது

 என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது 

கொழுப்பு உருவாகும் 

என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய்

 கொழுப்பாக மாறும் !

 

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம் !

.சகலவிதமான நோய்களையும் குணமாக்கும் !

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும் !

 

இரத்தத்தை சுத்தமாக்கும் !

உடலை உரமாக்கும் !

உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும் !

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை !

 

நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் 

அதுபோல, தேங்காய் கருவாகி பூமிக்கு 

வர 10 மாதம் ஆகும் !

இனி முடிந்த அளவு தேங்காயைப் பச்சையாக உண்போம் !

 

:குறிப்பு :

தேங்காய் குருமா !

தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக  (LDL)  மாறிவிடும் !

சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( HDL)

 

தேங்காயை துருவி  நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு 

சாயங்கா 

சிற்றுண்டி தந்து பாருங்கள் ! அவ்வளவு ஆரோகியம் !

 

பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் 

நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து,

வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், னால்  இப்போது

மாட்டு பால் ஊற்றி  முடித்து விடுகிறார்கள் !

 

தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு 

கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்

ஆனால்  இப்போது பாக்கெட் பால் !

 

காலையில் தேங்காயை துருவி அதனைப் அரைத்து 

பாலெடுத்து அதனுடன் நாட்டு

சர்க்கரை  அல்லது

கருப்பட்டி  அல்லது

தேன்

சேர்த்து பாக்கட் பாலைத் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக

 தந்து பாருங்கள் !

 

தாய்ப்பாலில் இருக்கும் ஆற்றலுக்கு இணையான 

ஆற்றல் தேங்காயைத்  தவிர 

வேறெதிலும்ல்லை !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

த.அழகேசன்,

ஆட்சியர்,

தமிழ்ப் புனல் வலைப்பூ,

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி ) 10]

{26-07-2021}

-----------------------------------------------------------------------------------------

உடலுக்குள் ஒரு தொழிற்சாலை !

 

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டுசுழன்று கொண்டிருக்கிறது !

 

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது !

 

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும் !

 

தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள் !

 

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும் !

 

உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே !

 

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும் !

 

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது !

 

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் !

 

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது !

 

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம் !

 

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரப் பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம் !

 

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது !

 

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது !

 

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும் !

 

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது !

 

கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

த.அழகேசன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புனல் வலைப்பூ,

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 10]

{26-07-2021}

-----------------------------------------------------------------------------------


                                                                   

சனி, 17 ஜூலை, 2021

நிலக்கடலையும் நமது உடல் நலமும் !

 

வேர்கடலை கொழுப்பு அல்ல !  அது ஒரு மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது !


நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் !

 

நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம் !

 

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும் !

 

தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம் !

 

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும் !

 

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது !


இதயம் காக்கும்:

 

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது !

 

இளமையை பராமரிக்கும்

 

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது !

 

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

 

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது !

 

மன அழுத்தம் போக்கும்:

 

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது !

.

கொழுப்பை குறைக்கும்

 

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது !

 

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது !

 

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது !

 

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

 

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்.

 

இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள் !

 

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது !

 

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

 

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது !

 

நிறைந்துள்ள சத்துக்கள்:

 

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.

நார்சத்து- 9 மி.கி.

கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.

புரதம்- 25 மி.கி.

ட்ரிப்டோபான்- 0.24 கி.

திரியோனின் – 0.85 கி

ஐசோலூசின் – 0.85 மி.கி.

லூசின் – 1.625 மி.கி.

லைசின் – 0.901 கி

குலுட்டாமிக் ஆசிட்- 5 கி

கிளைசின்- 1.512 கி

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி

கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.

காப்பர் – 11.44 மி.கி.

இரும்புச்சத்து – 4.58 மி.கி.

மெக்னீசியம் – 168.00 மி.கி.

மேங்கனீஸ் – 1.934 மி.கி.

பாஸ்பரஸ் – 376.00 மி.கி.

பொட்டாசியம் – 705.00 மி.கி.

சோடியம் – 18.00 மி.கி.

துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.

தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

 

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது !

 

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

 

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு !

 -----------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

த.அழகேசன்

ஆட்சியர்,

தமிழ்ப்புனல் வலைப்பூ,

[தி.ஆ;2052, கடகம் (ஆடி) 01]

17-07-2021

----------------------------------------------------------------------